sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சிந்தனைக் களம்

/

அகழாய்வு படும்பாடு

/

அகழாய்வு படும்பாடு

அகழாய்வு படும்பாடு

அகழாய்வு படும்பாடு

12


PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM

Google News

12

PUBLISHED ON : அக் 08, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொல்லியல் ஆய்வானது தேசிய, பிராந்திய இனவாதத்தின் கருவியாக மாறக்கூடாது. இது, வடக்கிற்கும் பொருந்தும்; தெற்கிற்கும் பொருந்தும். ராஜஸ்தானின் பஹாஜ் மற்றும் ஹரியானாவின் ராகிகடியில் நடந்த அகழாய்வுகளில் பல போதாமைகள் உள்ளன. தமிழகத்தின் கீழடியிலும், சிவகளையிலும் நடந்த அகழாய்வுகள் குறித்தும் எனக்கு பல கேள்விகள் உள்ளன.

கீழடி: கீழடியின் ஆய்வுகளை முன்னிட்டு தமிழக அரசு, 'கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதாவது, சங்க காலத்தில் வைகை நதிக்கரையில் அமைந்த ஒரு நகர்ப்புற நாகரிக குடியேற்றம் என பொருள் கொள்ளலாம்.

அந்தப் புத்தகத்தில், 'கீழடியில் பொ.மு., 580ம் ஆண்டைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானைத் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, இந்தியாவில் முதன்முதலாக தமிழ் நிலப்பரப்பில் எழுத்துரு தோன்றியதைக் குறிக்கிறது' என்று சொல்கிறது.

கலைப்பொருட்கள்


கீழடி, கி.மு., ஆறாம் நுாற்றாண்டு என்று தமிழக அரசு எவ்வாறு சொல்கிறது? அதில் கிடைத்திருக்கும் கலை பொருட்களின் காலம் துல்லியமாக அளவிடப்பட்டதாலா, நிச்சயம் இல்லை.

கீழடி யின் பானைத் துண்டுகளின் காலக்கணிப்பிற்கு, ஆய்வாளர்கள் கரிம பகுப்பாய்வு முறையை பின்பற்றியுள்ளனர்.

ஆனால், பானைத் துண்டுகள் பகுப்பாய்வு செய்யப்படவில் லை. அதே மண்ணடுக்கிலிருந்து சேகரிக்கப்பட்ட கரித்துண்டுகள் தான், கரிம பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த உண்மை மக்களுக்குச் சென்றடையவில்லை.

இப்பகுப்பாய்வு, கரித்துண்டாக மாறிய ஒரு மரம், எ வ்வளவு ஆண்டு களுக்கு முன் இறந்தது என்பதை மட்டுமே தரும். இக்காலத்தை, பானைத் துண்டுகளின் மீது அப்படியே ஏற்றுவது, அறிவியல்பூர்வமான முறையல்ல.

இந்த ஆண்டு கணக்கு மட்டுமே அத்தளத்தின் தொன்மையைச் சுட்டாது. தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்ட மண்ணடுக்கிலிருந்த கலைப்பொருட்கள் அந்த கரித்துண்டின் சம காலத்தவையா என்பதை, பல மற்றைய ஆதாரங்களைக் கவனத்தில் கொண்டே தீர்மானிக்க முடியும். இவ்வாறு செய் யப்படவில்லை.

கீழடியில் தோண்டி எடுத்த கரித்துண்டுகளில் ஒன்றின் காலம் கி.பி., 206க்கும் 345க்கும் இடைப்பட்டது என்று அறியப்பட்டுள்ளது. இது, கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மேலும் தொல்லியல் ஆய்வாளர்கள், ஒரே அடுக்கில் கிடைத்த கலைப்பொருட்கள் ஒரு காலப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கூற இயலுமே தவிர, துல்லியமாக அதன் வயதை அளவிட முடியாது.

இதே தவறான கால கணக்கீட்டு முறை, கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளரும் அவரது சக பணியாளரும், ஆங்கில பத்திரிகை ஒன்றில் எழுதிய ஒரு கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ளது:

அக்கட்டுரையின்படி, கீழடியில் தோண்டியதில் கிடைத்த மண்ணடுக்குகளில் 200 முதல் 353 செ.மீ., வரை கீழடுக்கில் கண்டறியப்பட்ட அனைத்து கலைப் பொருட்களும், கி.மு., 580 ஆண்டைச் சார்ந்தவை.

ஆனால், 200 செ.மீ., க்கு மேலே உள்ள மைய அடுக்கின் கலைப்பொருட்கள் கி.மு., 3ம் நுாற்றாண்டிலிருந்து கி.பி., 1ம் நுாற்றா ண்டைச் சேர்ந்தவை. அதாவது, ஓர் அடுக்கில் காணப்படும் கலைப்பொருட்கள் அனைத்தும், ஒரே ஆண்டைச் சார்ந்தவை. ஆனால், அதற்கு சற்றே மேலே உள்ள அடுக்கின் கலைப் பொருட்கள், 2 நுாற்றாண்டு காலத்துக்குப் பரந்து விரிந்தவை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த காலக் கணக்கீட்டு முறை, அறிவியல்பூர்வமானது அல்ல என்பதோடு, பிழையானதும் ஆகும்.

சிவகளை சிவகளையிலும் இதே உத்தி கையாளப்பட்டிருக்கிறது. புதைகுழிகளில் கிடைத்த கரித்துண்டின் காலம் ஈமத்தாழிகளில் கிடைத்த இரும்பின் மீது ஏற்றப்பட்டிருக்கிறது. இந்தக் காலக் கணக்கீட்டு முறை, கு றைபாடுடையது.

இதற்கு ஆதாரமாக, அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலை பேராசிரியர் டேவிட் கில்லிக்கின் கட்டுரை ஒன்று இருக்கிறது. அதில் அவர், கரித்துண்டின் வயதை கலைப்பொருட்களின் மீது ஏற்றும் முறை சரியானதன்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை, என் ஆய்வுக்கு ஆதாரமாக எடுத்துச் சொன்னபோது, ஆச்சரியமான அம் சம் ஒன்று நடைபெற்றது. என் கருத்தை மறுக்கும் வகையில், சிவகளையில் கிடைத்த கரித்துண்டுகளின் காலமும் இரும்பு பொருட்களின் காலமும் ஒன்றாகக் கருத முடியும் என்ற கருத்தை அதே பேராசிரி யர் சொல்லும் கட்டுரை ஒன்று வெளியானது.

நான் உடனடியாக பேராசிரியரி டம் விளக்கம் கேட்டேன். நான் அவரிடம், கரித்துண்டுகள் ஈமத்தாழிகளுக்கு உள்ளே கிடைக்கவில்லை; புதைகுழிகளில் கிடைத்துள்ளன. எனவே அதன் காலத்தை இரும்பின் மீது ஏற்று வது சரியாகாது எனக் குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு அவர், 'நீங்கள் இக்கேள்விகளை, அவ்விடத்தை அகழ்ந்த தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்க வேண்டும்' என்று பதிலளித்திருந்தார். தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டும் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. காரணம், கேள்விக்கு அறிவியல்பூர்வமாகப் பதில் சொல்ல முடியாது.

தமிழின் தொன்மையை நான் கேள்விக்கு உள்ளாக்குகிறேனா?

நிச்சயம் இல்லை. நான் கீழடி மற்றும் சிவகளை ஆய்வுகள் முக்கியமானவை அல்ல எனக் கூறவில்லை.

இடுகாடு அல்லாத தளத்திலிருந்து ஏராளமான கலைப்பொருட்கள் அகழ்வாய்வில் சேகரிக்கப்பட்ட வகையில், கீழடி முக்கியமானது. இதுபோன்றே, தமிழத்தில் வேளாண்மை, நாம் முன்பு நினைத்திருந்ததை விட முன்னதாகவே துவங்கியதை சிவகளை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் தமிழ் மொழியின் தொன்மையை நிறுவ அறிவியலுக்கு ஒத்துவராத முயற்சிகளை மேற்கொள்வது வருந்தத்தக்கது. இப்போதைய அவசரத்தேவை, சமரசங்கள் ஏதுமற்ற அறிவியல்பூர்வமான பகுப்பாய்வுகளே.

ராகிகடி மற்றும் பஹாஜில் நடைபெறும் ஆய்வுகளுக்கும் இதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.

இந்திய பண்பாட்டின் தொன்மை ஐயத்திற்கு இடமில்லாதது. அதுபோலவே, தமிழ் மொழியும், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்று. தமிழ் பண்பாடும் உலகளவில் புகழ் பெற்றதே.

அறிவியல்பூர்வமாக நிறுவ இயலாத கூற்றுகள் இத்தொன்மையை பறைசாற்ற பயன்படுத்தக் கூடாது. தொல்லியல் ஆய்வானது தேசிய, பிராந்தியவாதிகளின் கருவியாக மாறிவிடக்கூடாது.

- பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர்






      Dinamalar
      Follow us