PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

'பூமியின் சொர்க்கம்' என்று அழைக்கப்படும் காஷ்மீர் ஆப்பிள் தோட்டங்களால் நிறைந்தது. இங்கு விளையும் ஆப்பிள் பழங்கள், இந்தியாவின் பொருளாதாரத்துக்கும், ஏராளமான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் முதுகெலும்பாக உள்ளன. ஆனால், இயற்கையின் சீற்றம் - வெள்ளம், நிலச்சரிவு, கணிக்க முடியாத காலநிலை மாற்றங்கள் - இப்பொழுது அந்த 'சொர்க்கத்தை' ரணப்படுத்தியுள்ளது.
புல்வாமா விவசாயிகள் தற்போது கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்: “எங்களை யார் காப்பாற்றப் போகிறார்கள்?”
ஆப்பிளின் மணம் நிறைந்த காஷ்மீர் தோட்டங்கள் இன்று வறுமையின் நிழலில் மூழ்கியுள்ளன. மண்ணின் வாசத்தோடு கலந்துவிட்ட விவசாயிகளின் கண்ணீர், நாட்டின் மனசாட்சியைத் தொட்டே ஆக வேண்டும்.
ஒவ்வொரு விவசாயியும் தரையில் விழுந்த ஆப்பிளை எடுத்து அதற்கு எப்படியாவது உயிருட்டப் பார்க்கிறார்கள் காரணம் நமக்குதான் அது பழம் அவர்களுக்கு அது குழந்தையின் புத்தகத் தொகுப்பு, அவரது வீட்டின் உணவு, அவரது எதிர்கால கனவு.
காஷ்மீர் விவசாயியின் கண்ணீர், நம்முடைய நாட்டுடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
-எல்.முருகராஜ்