உடல் பருமன் குறைக்க வந்தாச்சு வாட்டர் ஒர்க் அவுட்!
உடல் பருமன் குறைக்க வந்தாச்சு வாட்டர் ஒர்க் அவுட்!
PUBLISHED ON : மே 17, 2026

உடல் எடையை குறைக்க ஜிம் செல்ல நேரமில்லை... மூட்டு வலி காரணமாக கடின பயிற்சி செய்ய முடியவில்லை... மன அழுத்தமும் அதிகம்... இவற்றுக்கெல்லாம் புதிய தீர்வாக கோவை பெண்களிடையே வேகமாக பிரபலமாகி வருகிறது 'அக்வா ஏரோபிக்ஸ்'
நீருக்குள் இசையுடன் செய்யப்படும் இந்த உடற்பயிற்சி, வெளிநாடுகளில் பிரபலம். இந்தியாவில் சென்னை, பெங்களூருவுக்கு அடுத்தபடியாக கோவையிலும் மெதுவாக கால்பதித்து கலக்கி வருகிறது. அக்வா ஏரோபிக்ஸ் என்பது, நீரில் நின்றபடி அல்லது நகர்ந்தபடி செய்யப்படும் கார்டியோ மற்றும் உடல் தசை பயிற்சிகளின் கலவை. நீரின் எதிர்ப்பு சக்தி காரணமாக சாதாரண நடைப்பயிற்சியைவிட, அதிக கலோரி எரிகிறது என பயிற்சியாளர்கள் கூறுகின்றனர்.
துடியலுார் சேப் விமன் பிட்னஸ் பயிற்சியாளர் அனிதா, ''உடல்பருமன் காரணமாக பெண்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பருமன் குறைக்க 'அக்வா ஏரோபிக்ஸ்' பயிற்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் அதிக கலோரி எரிக்கமுடியும். இப்பயிற்சியை எந்த வயதிலும், யார் வேண்டுமானாலும் செய்யலாம்,'' என்கிறார்.
நீச்சல் குளத்தில் நீந்தாமல், நீருக்குள் இசையுடன் உடலை இயக்கும் இந்த பயிற்சி, பெண்கள் மத்தியில் புதிய பிட்னஸ் தேர்வாக மாறி வருகிறது.
