குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறுதீனிகள்!
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறுதீனிகள்!
PUBLISHED ON : ஜூன் 14, 2026

சமச்சீரான உணவு என்பது, நம் அன்றாட தேவைகளுக்கு ஆற்றலை வழங்கக் கூடியதாகவும், அவசர தேவைகளுக்கு ஆற்றல் சேமிப்பாகவும் இருக்கும் வகையில், மாவுச்சத்து, புரதம், கொழுப்புச் சத்து, வைட்டமின், தாதுக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு, இரண்டு - மூன்று முறை, சத்தான சிறுதீனி தருவது, அவர்களுக்கு மகிழ்ச்சியையும், அதேநேரத் தில், உடல் வளர்ச்சிக்கும் உதவும்.
குழந்தைகளுக்கான ஒரு சொலவடையாக “சாப்பிடும்போதே விளையாடலாம் அல் லது விளையாடிக் கொண்டே சாப்பிடலாம்” என்று சொல்வர். சிறுதீனி என்று எதை வேண்டுமானாலும் தரலாமா என்று கேட்டால், கூடாது என்பது தான் பதில்.
காரணம், பாக்கெ ட்டுகளில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட திண்பண்டங்களில், உ டல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பல வேதிப்பொருட்களை, சுவை, மணம், நித்திற்காக சேர்க்கின்றனர். வணிகநோக்கத்துடன், குழந்தைகளை கவரக்கூடிய வகையில், வண்ண வண்ண பாக்கெட்டுகளில், பொம்மைகள், கார்ட்டூன் ஸ்டிக்கர்கள் ஒட்டி, விளம்பரங்கள் மூலம் விற்கின்றனர். இவை விலை அதிகம் என்பது ஒருபுறம், அவற்றில் சத்துக்கள் இருப்பதில்லை. தேவையற்ற கலோரி தான் உள்ளது.
இந்த மாதிரியான உணவுகளை குழந்தை களுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்தானது. சிறுதீனிகளை வீட்டிலேயே தயாரித்து தருவது தான் சிறந்தது. சட்டென செய்யக்கூடிய வகையில் சிறுதானிய அடைகள், உருண்டைகள், புட்டு, கொழுக்கட்டை செய்து தரலாம்.
வாரத்தில் ஓரிரு நாட்கள், எண்ணெயில் பொரித்த போண்டா, பஜ்ஜி, வடை, சுய் யம், கேசரி, பாயாசம் தரலாம். தினமும் ஒரு வேளை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, மாதுளை போன்ற பழங்களை சாப்பிடத் தரலாம். பேரீச்சம் பழம், பொட்டுக்கடலை, வேர்க் கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சையை கொடுக்கலாம் .
வெளி உணவை குழந்தைக்கு வாங்கித் தரும் போது, சுவையூட்டிகள் சேர்க்காத, புதிதாக சமைத்த உணவு களை தரலாம். உதாரணமாக பொரி கடலை, பட்டாணி, சுண்டல் வகைகள், வேர்க்கடலை உருண் டைகள், எள் உருண்டை, அவல், போளி, மோதகம், கொழுக்கட்டை போன்றவை.
வீட்டில் தயாரித்த உணவுகளை, வண் ணமயமான தட்டில் வைத்து, உணவின் பெயர், அவற்றில் உள்ள சத்துக்கள், உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை சொன்னால், குழந் தைகளுக்கு ஆரோ க்கியமான உணவு சாப்பிடுவதில், ஆர்வம் ஏற்படும்.
டாக்டர்.க.ராவணன், குழந்தைகள் நல மருத்துவர், அரக்கோணம் 94449 55329drkravanan@gmail.com
