தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/உடல் சோர்வுக்கு முதுமை மட்டுமே காரணம் கிடையாது

உடல் சோர்வுக்கு முதுமை மட்டுமே காரணம் கிடையாது

உடல் சோர்வுக்கு முதுமை மட்டுமே காரணம் கிடையாது


PUBLISHED ON : டிச 14, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதுமை என்றாலே உடல் சோர்வு பிரச்னை பொதுவானது. ஆனால், அதை சாதாரணமாக கடந்து விடக்கூடாது என்கிறார், கோவை அரசு மருத்துவமனை பொது மருத்துவ பிரிவு தலைவர் சிவக்குமார்.

அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது..

* வயது, நோய் எதிர்ப்பு திறன் குறைதல், தேய்மானங்கள், தொற்றாநோய் போன்றவை சாதாரண பிரச்னைகளை கூட, அசாதாரண நோய்களாக மாற்றிவிடும் என்பதால், எந்த உடல் அறிகுறிகளையும் அலட்சியம் செய்யக்கூடாது.

* உடல் சோர்வு, வயதாகிவிட்டால் வரும் என்ற பொதுவான கருத்து தவறானது. ரத்தசோகை, தைராய்டு குறைதல், பிற தீவிர வியாதிகளின் அறிகுறியாகவும் இருக்க வாய்ப்புண்டு. டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களின்ஒத்துழைப்பு அவசியம்.

* நிமோனியா பாதிப்பை தடுக்க, ஆண்டுக்கு ஒரு முறை ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்.

* ஆண்டுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. பிரச்னைகள் இருந்தால் அப்பரிசோதனை தனி. முழு உடல் பரிசோதனை என்பது நோய் உள்ளதா, நோய் வர வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து, முன்னெச்சரிக்கையாக செயல்பட உதவும்.

* வாழ்க்கை முறையை மாற்றி உடல் இயக்கம், உணவு முறை, உடற்பயிற்சி, போன்றவற்றை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர்தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us