sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் தங்கம்

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் தங்கம்

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் தங்கம்


PUBLISHED ON : ஏப் 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தை நோய் எதிர்ப்பு மேம்பாட்டுக்கான சுவர்ண பிராஷனம் என்பது இரண்டு சொற்களால் ஆனது. 'சுவர்ண' என்பது தங்கத்தை குறிக்கும்; 'பிராஷனம்' என்பது உட்கொள்ளுதல் அல்லது அருந்துதல் என்று பொருள். அதாவது, தங்கத்தை மருந்தாக உட் கொள்ளும் பாரம்பரிய நடை மு றைதான் சுவர்ண பிராஷனம் ஆகும். இது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பேணும் ஒரு பாதுகாப்பான முறையாகப் பார்க்கப் படுகிறது.

இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டிலும் தங்கம் ஒரு உயர்ந்த மருந்துப் பொருளாகக் கருதப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மை கொண்டது எனப் பழமையான நுால்கள் குறிப்பிடுகின்றன.

ஆயுஷ் அமைச்சகம் சுவர்ண பிராஷனத்தை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய பாரம்பரிய நடைமுறையாக பரிந்துரைக்கிறது. நாடு முழுதும் பல ஆயுர்வேத மையங்களில் இது நடைமுறையில் இருந்து வருகிறது மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

தங்கம் நேரடியாக மருந்தாக பயன்படுத்தப்படாது. அது சுத்திகரிப்பு மற்றும் மாறணம் போன்ற முறைகளின் மூலம் நுண்ணிய மருந்தாக மாற்றப்படுகிறது. இந்த முறைகள், தங்கத்தை உடலில் எளிதில் உறிஞ்சக்கூடியதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றுகின்றன.

இவ்வாறு தயாரிக்கப்படும் ஸ்வர்ண பஸ்மம் அல்லது தங்க பற்பம் மற்றும் தங்க செந்துாரம் போன்ற வடிவங்கள், மிகவும் குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

சுவர்ண பிராஷனம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதோடு, நினைவாற்றல், கவனம், அறிவுத்திறன் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது. உடல் வளர்ச்சி சீராக நடைபெறவும், அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகளை குறைக்கவும் இது உதவுகிறது.

காயகல்பக் குணம் கொண்டதாக கருதப்படுவதால், உடல் உறுதியையும் நீண்டகால நலத்தையும் மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

டாக்டர் சுதீர், டாக்டர் மீரா கூறுவதாவது, இன்றைய காலத்தில் குழந்தைகள் அடிக்கடி நோய்களுக்கு ஆளாகும் சூழலில், சுவர்ண பிராஷனம் போன்ற பாரம்பரிய முறைகள் அவர்களின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பாக உயர்த்த உதவுகின்றன. இது ஒரு சாதாரண மருந்து அல்ல; இது ஒரு முழுமையான திட்டமாகும். குழந்தைகளின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் மற்றும் உடல் நலத்திற்கு இது நீண்டகால பலனை வழங்கக்கூடியது.

'ஸ்ரீ ஹரீயம் ஆயுர்வேத' நிறுவனம், இந்த சுவர்ண பிராஷன திட்டத்தை ஒரு சமூக நல இயக்கமாக முன்னெடுத்து வருகிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், முதல் டோஸ் முழுமையாக இலவசமாக, April 24 2026 பூச நட்சத்திரத்தன்று வழங்கப்பட்ட இது, பெற்றோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.

சுவர்ண பிராஷனம் மிகச் சிறிய அளவில் தேன், நெய் அல்லது பால் ஆகியவற்றுடன் கலந்து, தகுந்த மருத்துவர் கண்காணிப்பில் அளிக்கப்படு கிறது. இதையும் மருத்துவர் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

“பின்னடைந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உயர்ந்த நோக்கத்துடன், ஸ்ரீ ஹரீயம் ஆயுர்வேதாவின் சார்பில், சீதானஞ்சேரி மற்றும் சாத்தானஞ்சேரி பகுதிகளில் உள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த 100 குழந்தைகளுக்கு, சுவர்ண பிராஷன் துளிகள் இலவசமாக வழங்கும் சமூக நலத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.”

டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர், ஸ்ரீஹரியம் ஆயுர்வேதம், சென்னை 86101 77899sreehareeyam.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us