sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

இதய மின் அலைகளை சீர் குலைக்கும் ஷார்ட் சர்க்யூட்!

/

இதய மின் அலைகளை சீர் குலைக்கும் ஷார்ட் சர்க்யூட்!

இதய மின் அலைகளை சீர் குலைக்கும் ஷார்ட் சர்க்யூட்!

இதய மின் அலைகளை சீர் குலைக்கும் ஷார்ட் சர்க்யூட்!


PUBLISHED ON : செப் 28, 2025

Google News

PUBLISHED ON : செப் 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலக இதய தினத்தின் இந்த ஆண்டிற்கான கருப் பொருள், இதயத் துடிப்பை தவிர்க்க வேண்டாம் என்பது. நுரையீரல் சுத்தம் செய்து அனுப்பும் ரத்தத்தை உடல் முழுவதும் ரத்தக் குழாய்கள் வழியாக கொண்டு செல்லும் இதயம், இடைவிடாமல் ஒரே சீராக லப் -டப் என்று துடிப்பது தான் நாம் உயிருடன் இருப்பதற்கான அடையாளம்.

இதயத்தில் மின் அதிர்வுகளால் இயல்பாக இருந்தால் இதயத் துடிப்பும் சீராக இருக்கும். மின் அதிர்வுகளில் மாற்றம் ஏற்படும் போது இதயத் துடிப்பு மிக மெதுவாகவோ, வழக்கத்திற்கு அதிகமாகவோ இருக்கலாம். இதுபோன்ற அசாதாரண 'ஷார்ட் சர்க்யூட்'டுகள் உருவாகும்போது, ​​தலைச்சுற்றல், பக்க வாதம், இதய செயலிழப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

பிறவியிலேயே இதயக் கோளாறு கள் இருப்பது, வயோதிகம், மாரடைப்புக்குப் பின் ஷர்ட் சர்க்யூட்டுகள் ஏற்படலாம்.இசிஜி, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். வீட்டில் மின்சார பிரச்னையை சரி செய்ய நல்ல எலக்ட்ரீஷியனை அழைப்பது போல, அசாதாரண இதய மின் அதிர்வுகளை சரி செய்ய இதய நோய் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

டாக்டர் பரிந்துரைக்கும் பரிசோதனைகள், அதற்கான ஆன்டி-ஆர்ரித்மிக் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளும்போது இதைக் கட்டுக்குள் வைக்கலாம். மருந்து பலன் தராத பட்சத்தில், 'எலக்ட்ரோபிசியாலஜிக்கல் ஆய்வு, ரேடியோ ப்ரீக்வென்சி அபிலேஷன்' மூலம் குணப்படுத்தலாம்.

ஒரு எலக்ட்ரீஷியன் எப்படி வீட்டில் மின்சார கம்பிகளைச் சரிபார்த்து ஷார்ட் சர்க்யூட் எங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது போல, எலக்ட்ரோபிசியாலஜிஸ்டுகளாகிய டாக்டர்கள் இதயத்தின் மின் அலைகள் எவ்வாறு பாய்கிறது என்பதையும், வேகமான இதயத் துடிப்பை ஏற்படுத்தும் ஷார்ட் சர்க்யூட் கம்பிகளை துல்லியமாகக் கண்டறிய, இதயத்திற்குள் சிறிய 'ரோபோ' வடிகுழாய் கம்பிகளை தொடை வழியாக செலுத்தி, வழக்கமான ஆஞ்சியோகிராம்கள் செய்வது போல செய்வதன் மூலம் அறிந்து கொள்வர்.

சில நேரங்களில் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டால், 3டி முப்பரிமாணத்தில் மின் அலைகள், அசாதாரண ஷார்ட்-சர்க்யூட்கள் இரண்டையும் காண முடியும்.

பேராசிரியர் டாக்டர் குரு பிரசாத் சோகுனுரு, மூத்த நுண்துளையிட்டு இதயநோய் நிபுணர், க்ளெனிகல்ஸ் மருத்துவமனை, சென்னை 79967 89196info.chn@glemeagleshospitals.co.in






      Dinamalar
      Follow us