ADDED : அக் 29, 2025 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிகம் எதிர்பார்க்கப்படும் 'டஸ்டர்' மிட் சைஸ் எஸ்.யூ.வி., காரை, வரும் குடியரசு தினத்தில் அறிமுகப்படுத்த இருப்பதாக 'ரெனோ' நிறுவனம் அறிவித்துள்ளது.
இதர கார் நிறுவனங்களின் கடும் போட்டியின் காரணமாக, இந்த காரின் விற்பனை குறைய துவங்கியதால், 2022ம் ஆண்டில் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந் நிலையில், நான்கு ஆண்டு களுக்கு பிறகு மீண்டும் அறிமுகமாக உள்ளது, கார் பிரியர்களை குஷிபடுத்தி உள்ளது.
இந்த கார், 1.3 லிட்டர், 'ஹெச்.ஆர்., 13' என்ற டர்போ மற்றும் கைகர் காரில் வரும் 1 லிட்டர், 3 - சிலிண்டர், டர்போ என இரு பெட்ரோல் இன்ஜின்களில் வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், ஹைபிரிட் மாடலில் வர உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

