தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/ கண்டுக்காமல் மாஜி ஓட்டம்; தோற்ற கட்சியில் காட்டம்

 கண்டுக்காமல் மாஜி ஓட்டம்; தோற்ற கட்சியில் காட்டம்

 கண்டுக்காமல் மாஜி ஓட்டம்; தோற்ற கட்சியில் காட்டம்


ADDED : மே 26, 2026 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 07:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காந்திபார்க்கில் ஒரு நண்பரை சந்திக்க புறப்பட்ட சித்ராவும், மித்ராவும் 7ம் நம்பர் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பெட்ரோல் விலை அதிகம் என்பதால் சிக்கனம்.

சீட்டில் உட்கார்ந்ததும் மித்ரா, ''என்னக்கா... உள்ளாட்சி துறையே சி.எம்.கிட்ட இருக்கு. அந்த துறையில ஏதாச்சும் தடாலடி உத்தரவு வரும்னு எதிர்பார்த்தா, எதுவுமே காணலை. ஆனா, எக்கச்சக்கமா முறைகேடு நடக்குதாமே...''

''நானும் கேள்விப்பட்டேன். பிப்.,யில ரிட்டையர் ஆன இன்ஜி., செக்ஷன் ஆபீசர் ஒருத்தரை கார்ப்பரேஷன் மெயின் ஆபீசுக்கு வரச்சொல்லி, பழைய பைல்கள்ல கையெழுத்து வாங்கியிருக்காங்க.

இத பத்தி கமிஷனரோட நேரடி கவனத்துக்கு கொண்டு போயும் எந்த ஆக்சனும் இல்லை. ரிட்டையர் ஆன ஆபீசர் பச்சை இங்க்ல கையெழுத்து போட யார் அதிகாரம் குடுத்ததுன்னு சர்ச்சை கெளம்பியிருக்கு.

இன்ஜி., செக்சன்ல இருக்கற மத்த ஆபீசர்களும் உடந்தையா இருக்காங்களான்னு சந்தேகம் வந்திருக்கு. அதனால இன்ஜி., செக்சன்ல இருக்கற எல்லா பைல்களையும் இன்னொருவாட்டி ஆடிட் பண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்குன்னு பேசிக்கிறாங்க...''

''எலக்சன் சமயத்துல பெண்டிங்காகி இருந்த ஏகப்பட்ட பைல்கள்ல கமிஷனர் கையெழுத்து போட்டுக் குடுத்துட்டாராம். ஆனா, ரெவின்யூ செக்ஷன், டவுன் பிளானிங் செக்ஷன்ல இருக்கற சில பேரு, ஆபீசர்களுக்கு குடுக்கணும்னு சொல்லி, லஞ்சம் கேக்குறாங்களாம்.

பப்ளிக் சைடுல இருந்து, பார்ட்டி பண்ட் கிடையாதுன்னு சொன்னாங்களேன்னு யாராச்சும் கேட்டா, 'இது, பார்ட்டி பண்ட் இல்லீங்க... ஆபீசர்களுக்கு குடுக்க வேண்டியதுன்னு கேக்குறாங்களாம்''

''இதை கேளு...எலக்ஷன்ல தோத்த துக்கு பெறகு நம்மூர்ல தி.மு.க. உள்கட்சி பிரச்னை ஜாஸ்தியாயிருக்கு. ஜாதி பார்த்து பதவி குடுக்றதா கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச்செயலர் மீனா ஜெயகுமார் கட்சியில இருந்து விலகியிருக்காங்க. கவுன்சிலர்களோட அட்ராசிட்டி உச்சத்துல இருந்தும் மாவட்ட பொறுப்பாளர் அதை கட்டுப்படுத்தலை; தி.மு.க. தோக்றதுக்கு அது முக்கிய காரணமா ஆயிருச்சுன்னு கட்சி நிர்வாகிகளே காட்டமா கமென்ட் அடிக்கறாங்க''.

''நானும் கேள்விப்பட்டேன். ஆனா பொறுப்பாளர் கண்டுக்கற மாதிரி தெரியலை. கட்சி எலக்ஷன்ல தோத்ததுக்கு பெறகு அவர் ஒரே ஒரு தடவை இங்க வந்து, ஓட்டு போட்டவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு போனார். ரேஸ்கோர்ஸ் வீடு ராசியில்லன்னு காலி செய்ய முடிவு பண்ணியிருக்காராம்''.

''அவரு மட்டுமில்ல, நம்மூரு இண்டஸ்ட்ரிகாரங்களுக்கும் ஏமாற்றம்தான்''

''ஏனாம்''

''ரெண்டு அமைச்சர்ல ஒருத்தருக்கு தொழில்துறை கிடைக்கும்; பிரச்னைகள ஈசியா தீர்க்க வசதியா இருக்கும்னு எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. கிடைக்காததால மூட் ஆப்''

--''அத விடு. கோவை வடக்கு, தெற்கு, அன்னுார் ஆகிய தாசில்தார் ஆபீஸ்கள்ல பட்டா வேலைகளுக்கு அதிகாரிங்க லஞ்சம் வாங்கறதா தகவல் வந்துச்சுல்ல...அதனால ரெண்டு வாரமா லஞ்ச ஒழிப்பு அதிகாரிங்க இந்த ஆபீஸ்கள வாட்ச் பண்ணிட்டு இருக்காங்க''

''வெரிகுட்''

''ஆனா அதிகாரிங்க கில்லாடிகளாச்சே...வாரக்கடைசில சீட்ல இருக்கறதில்லை. ஏதாவது காரணம் சொல்லி வெளிய போயிர்றாங்க. இல்லேன்னா லீவுல போயிர்றாங்க. டிராப் பண்ணி பிடிக்கலாம்னு காத்திருந்தவங்க வட போச்சேன்னு நொந்துட்டாங்களாம்''.

''அவங்க சர்வேயர்களுக்கு வலை விரிச்சா பிடிச்சுரலாம். அவங்க காசு வாங்காம பட்டா மாத்துறதில்லைன்னு பேச்சு''

''ஸ்கூல்லாம் திறக்கப்போகுது. ஸ்டூடண்ட்சுக்கு குடுக்க ப்ரீ புக்ஸ்லாம் வந்தாச்சு. வட்டார வள மையங்கள்ல இருந்து ஸ்கூல்களுக்கு கொண்டு போக, ஒரு வட்டாரத்துக்கு 30 ஆயிரத்துல இருந்து அம்பதாயிரம் வரை ஒதுக்கறாங்க.

இத வச்சு எல்லா ஸ்கூலுக்கும் புஸ்தகங்கள அனுப்ப வேண்டியது வட்டார கல்வி அலுவலர் பொறுப்பு. ஆனா பேரூர்காரரு, எச்.எம். அல்லது டீச்சர்சை வரவழைச்சு எடுத்துட்டுப் போக சொல்றாராம்''.

''பேர்ல பூ வச்சிருக்காங்கன்னுதான் பேரு. ஞாயித்துக்கிழமை கூட டூட்டிக்கு வரச்சொல்லி கடுமையா நடந்துக்கறாங்களாம் ஒரு லேடி ஆபீசர்''

''யாரு அந்த கொடுமக்கார அக்கா?''

''அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட ெஹட் ஆபீசுல இருக்காங்க அவங்க. அவசரத்துக்கு லீவு கேட்டாலும் ஆள் இல்லன்னு தர்றதில்லையாம். அதனால எம்பிளாயீஸ் நொந்து போயி இருக்காங்களாம்''

''நிஜமாவே ஆள் இல்லாம இருக்கலாம். விசாரிச்சாதான் உண்மை தெரியும்''

- அதற்குள் காந்திபார்க் வந்து விட, இருவரும் பஸ்சில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us