தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ பெலகாவியில் பார்க்க வேண்டிய இடங்கள்

 பெலகாவியில் பார்க்க வேண்டிய இடங்கள்

 பெலகாவியில் பார்க்க வேண்டிய இடங்கள்


ADDED : பிப் 19, 2026 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 07:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ளது பெலகாவி மாவட்டம். இங்கு பார்ப்பதற்கு பல சுற்றுலா தலங்கள் உள்ளன.

பெலகாவி கோட்டை: மாவட்டத்தின் மையப்பகுதியில் பெலகாவி கோட்டை அமைந்துள்ளது. 13ம் நுாற்றாண்டில், ரட்டா வம்சத்தினரால் கட்டப்பட்டது. வட்ட வடிவில் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஹிந்து, சமணம், இஸ்லாமியக் கட்டடக் கலைகள் சங்கமிக்கின்றன. குறிப்பாக, இங்குள்ள கமல் பஸ்தி எனும் ஜெயின் கோவில் மேற்கூரையில் உள்ள தாமரை வடிவ செதுக்கல்களுக்காக உலகப் புகழ்பெற்றது.

கோகாக் நீர்வீழ்ச்சி: பெலகாவியிலிருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள கோகாக் நீர்வீழ்ச்சி, பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தும். 171 அடி உயரத்தில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது.

இது, 'இந்தியாவின் நயாகரா' என அழைக்கப்படுகிறது. இந்த அருவியின் அருகே அமைந்துள்ள ஒரு தொங்கு பாலம் பிரமிப்பை ஏற்படுத்தும். இதில் நடந்து செல்லும் அனுபவம் வாழ்வில் மறக்க முடியாது.

மிலிட்டரி மஹாதேவ் கோவில்: இக்கோவில், நம் ராணுவத்தால் பராமரிக்கப்படுகிறது. கோவில் மிகவும் துாய்மையாக இருக்கும். துாய்மைக்கும், பசுமைக்கும் பெயர் பெற்றது. கோவிலைச் சுற்றியுள்ள தோட்டங்கள், சிறுவர் பூங்காக்களில் மாலை நேரத்தை அமைதியாகக் கழிக்கலாம்.

எல்லுார் கோட்டை: மலையுச்சியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை. மலையேற்ற ஆர்வலர்களுக்கு பிடித்தமான இடம். இந்த மலையின் உச்சியில் இருந்து பெலகாவி நகரை முழுமையாக பார்க்கலாம்; இது விசித்திர அனுபவத்தை கொடுப்பது உறுதி.

கோட்டை ஏரி: மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க விரும்பும் பலரும் கோட்டை ஏரிக்கு செல்வதை பார்க்க முடியும்.

இங்குள்ள படகு சவாரி சுற்றுலா பயணியரை ஈர்க்கும் சக்தி உடையது. ஏரியின் நடுவே உள்ள 110 மீட்டர் உயரமான தேசியக் கொடி கம்பம் பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இங்கு போட்டோ எடுத்துக் கொள்வது மலரும் நினைவாக இருக்கும்.

மொத்தத்தில் பெலகாவி பயணம் மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும். இது தவிர மேலும் பல இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.

எப்போது செல்லலாம்?

 இந்த சுற்றுப்பயணத்திற்கா க ஜூன் முதல் பிப்ரவரி வரை மாதங்களை தேர்வு செய்வது நல்லது.

 புகழ்பெற்ற இனிப்பு வகையான குந்தா, மண்டே பண்டங்களை மறக்காமல் சுவைக்க வேண்டும்.

 நிறைய இடங்கள் இருப்பதால், பொது போக்குவரத்தில் செல்வது வசதியாக இருக்காது. தங்கள் சொந்த வாகனங்கள், வா டகை வாகனங்களில் செல்வது சிறப்பு.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us