ADDED : மே 15, 2026 03:34 AM

பெங்களூரு: கால்பந்து போட்டியில் பயோனியர் எப்.சி., அணியை, புளூ டைமண்ட் அணி வீழ்த்தி உள்ளது.
கர்நாடக மாநில கால்பந்து சங்கம் சார்பில், பெங்களூரு அசோக் நகரில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தில் பல அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த போட்டியில் பயோனியர் எப்.சி., - புளூ டைமண்ட் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே சிறப்பாக ஆடிய புளூ டைமண்ட் அணிக்கு, அந்த அணியின் வீரர்கள் மணிமாறன், பாபு, செல்வா ஆகியோர், தலா, 2 கோல்கள் அடித்தனர். பிரசாந்த், பிரேம் தலா ஒரு கோல் அடித்ததன் மூலம், அந்த அணிக்கு 8 கோல் கிடைத்தது. ஆனால் எதிரணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இதே பிரிவில், மற்றொரு போட்டியில் அக்னிபுத்ரா எப்.சி., அணி, மகேஷ்ராஜ் யுனைடெட் எப்.சி., அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
