தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/சாய் பாபா நிறுவன விழா

சாய் பாபா நிறுவன விழா

சாய் பாபா நிறுவன விழா


ஏப் 05, 2026

Follow on GoogleFavourite on Google

ஏப் 05, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

குரு கிராம் செக்டார் 109 ல் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் ஆறாவது வருட நிறுவன விழா சென்ற வாரம் குரு ஸ்ரீ தாரா மாதா முன்னிலையில் நடைபெற்றது.


முக்கிய தெய்வமான சீரடி பாபாவிற்கு சகல விதமான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.முன்னதாக மூன்று நாட்கள் மகா ருத்ரம் குருஜி சந்திரசேகர் தலைமையில் 50 ரித்விக்குகளால் ஜபிக்கப்பட்டு அபிஷேகம் நடந்தது.


அடுத்த வந்த இரண்டு நாட்கள் குரு ஸ்ரீ தாரா மாதாவின் அனுக்கிரக சொற்பொழிவு நடைபெற்றது.மார்ச் 25 ம் தேதி சீரடி சாயி பாபா ஸ்தாபன தினம் அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடப்பட்டது.


கிழக்கு தில்லியில் இருந்து பக்தர்கள் பேருந்தில் திரளாக வந்து லலிதா சஹஸ்ரநாமம் தன்வந்திரி காயத்ரி மந்திரத்தை உச்சரித்தனர்.தேவியை ஆரோக்கிய வர்த்தினியாக அமர்த்தி பக்தர் நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் பிராத்தனைகள் செய்யப்பட்டன.


வந்திருந்த பக்தர்கள் குருவின் ஆசி பெற்று மனநிறைவுடன் சென்றனர்.


- தில்லியில் இருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us