ஏப் 01, 2026

நொய்டாவில் பங்குனி உத்திரம்
ஊரில் சொந்த இடம் இல்லாவிட்டாலும், 'உத்திரம்' நட்சத்திரத்தில் ஒரு பிள்ளையாவது இருக்கணும்', என்கிற பழமொழியை நாம் எல்லோரும் அறிவோம். அறுபடை வீடுகளில் ஆரம்பித்து, தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடு, இந்தியாவில் இருக்கும் இதர முருகன் கோவில்களில், நடப்பது போலவே, செக்டார் 62 நொய்டா, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் நடைபெற்றது. பால்குடம், காவடி, ஸ்ரீ கார்த்திகேயனுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் பாடல்கள் என 'பங்குனி உத்திர திருவிழா' வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலையில் காவடி மற்றும் பால்குடம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள் பக்தர்களால் எடுத்து செல்லப்பட்டது. அனைத்து பூஜைகளும் கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா ஆகியோரின் உதவியுடன் செய்யப்பட்டது. பக்தர்கள், ஸ்கந்த சஷ்டி, கந்தர் அனுபூதி மற்றும் இதர ஸ்லோகங்கள் மட்டுமல்லாமல், முருகனை போற்றி பாடல்களை பாடினார்கள் .
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் ஸஹஸ்ரநாம அர்ச்சனைகோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நொய்டா கோவில் முருகனை காண வருவோர்க்கு 'வெற்றி நிச்சயம்', தவிர, கோபுரத்தை காண வருவோர்க்கும் 'கோடி புண்ணியம்'.
- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்
