sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் காசாவை இணைக்காது: டிரம்பின் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் சம்மதம்!

/

இஸ்ரேல் காசாவை இணைக்காது: டிரம்பின் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் சம்மதம்!

இஸ்ரேல் காசாவை இணைக்காது: டிரம்பின் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் சம்மதம்!

இஸ்ரேல் காசாவை இணைக்காது: டிரம்பின் போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் சம்மதம்!

2


ADDED : செப் 30, 2025 07:28 AM

Google News

2

ADDED : செப் 30, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: காசா போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் போர் நிறுத்த யோசனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில், காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் காசா போர் நிறுத்தத்துக்கான விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டார் என நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் அறிவித்தார். அப்போது போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பான 20 அம்சத் திட்டம் குறித்து, அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:

காசாவுக்கான தனது 20 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டதற்காக அவருக்கு நன்றி. ஹமாஸ் இந்த அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தால், அந்த அமைப்பின் அச்சுறுத்தலை அழித்து வேலையை முடிக்க இஸ்ரேலுக்கு எனது முழு ஆதரவும் இருக்கும். காசா போரில் அமைதியைப் ஏற்படுத்துவதில் அமெரிக்கா மிக மிக அருகில் வந்துவிட்டது.

அனைவரும் ஒரு சிறப்பான ஒப்பந்தத்திற்காக இணைந்திருக்கிறார்கள். இஸ்ரேல் காசாவை இணைக்காது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இறந்த பிணைக்கைதிகளின் உடல்கள் தாமதமின்றி திருப்பி அனுப்பப்படும். போர் உடனடியாக முடிவுக்கு வரும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

டிரம்பின் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்கள்:

* ஹமாஸ் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவித்தால், அடுத்தக்கட்டமாக படிப்படியாக இஸ்ரேல் படையினர் காசாவில் இருந்து வெளியேறுவார்கள்.

* அமைதியை மீட்டெடுக்கவும், ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தற்காலிக சர்வதேச படை நிலை நிறுத்தப்படும்.

* ஹமாஸ் படையினர் முழுமையாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அமைதியை ஏற்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.

* இஸ்ரேல் காசாவை இணைக்காது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை விட்டு யாரும் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள்.

இஸ்ரேல் பிரதமர் சொல்வது என்ன?

இது குறித்து நிருபர்களிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்ப் திட்டம் எங்கள் போர் நோக்கங்களை அடைகிறது. இது எங்கள் அனைத்து பிணைக்கைதிகளையும் திரும்பக் கொண்டு வரும், ஹமாஸின் ராணுவத் திறன்களை அகற்றும்.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும். காசா மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்யும். எங்கள் இரு நாடுகளும் தோளோடு தோள் நிற்கும்போது. சாத்தியமற்றதை நாங்கள் அடைகிறோம்.

ஹமாஸ் படை நிராயுதபாணியாக்கப்படும். காசா ராணுவமயமாக்கப்படும். இஸ்ரேல் எதிர்காலத்தில் பாதுகாப்புப் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்ளும். உங்கள் (டிரம்ப்) திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டால், முதல் கட்டமாக, படைகளை திரும்பப் பெறுவோம். அதைத் தொடர்ந்து 72 மணி நேரத்திற்குள் எங்கள் அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

8 நாடுகள் வரவேற்பு

காசா மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான டிரம்பின் திட்டங்களை வரவேற்று எட்டு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், காசாவில் மீண்டும் அமைதியை உருவாக்கவும், டிரம்பின் முயற்சியை வரவேற்றனர். மேற்கு கரையை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை தடுப்பதற்கான அவரது உறுதிப்பாட்டை அவர்கள் பாராட்டினர்.








      Dinamalar
      Follow us