தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/இந்திய ராணுவத்திற்கு தொழில்நுட்ப ஆதரவு; அமெரிக்கா ஒப்புதல்

இந்திய ராணுவத்திற்கு தொழில்நுட்ப ஆதரவு; அமெரிக்கா ஒப்புதல்

இந்திய ராணுவத்திற்கு தொழில்நுட்ப ஆதரவு; அமெரிக்கா ஒப்புதல்


ADDED : மே 19, 2026 02:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 02:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: இந்தியாவின் அபாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ஹோவிட்சர் பீரங்கிகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த ரூ.4,122 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப ஆதரவு திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடப்பட்ட அறிக்கை; அபாச்சி ஹெலிகாப்டர்களை பராமரிக்கும் முக்கிய ஒப்பந்ததாரர்களாக போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனங்கள் செயல்படும். ஹோவிட்சர் பீரங்கிகளின் பராமரிப்புக்கான முக்கிய ஒப்பந்ததாரராக பிஏஇ சிஸ்டம்ஸ் நிறுவனம் செயல்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் அபாச்சி ஹெலிகாப்டர்களுக்கான இன்ஜினியரிங், தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவுச் சேவைகள், தொழில்நுட்பத் தரவுகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். அதேபோல, ஹோவிட்சர் பீரங்கிகளைப் பொறுத்தவரையில் உதிரி பாகங்கள், பழுதுபார்ப்பு சேவைகள், பயிற்சி, தொழில்நுட்ப உதவி, கள சேவைப் பிரதிநிதித்துவம் மற்றும் இதர தளவாட ஆதரவுகள் இதில் அடங்கும்.

இந்தியாவுடனான ராணுவ உறவை மேம்படுத்தவும், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us