ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வி: பெரிய முன்னேற்றம் என்கிறார் எலான் மஸ்க்
ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வி: பெரிய முன்னேற்றம் என்கிறார் எலான் மஸ்க்
ADDED : மே 28, 2025 02:40 PM

வாஷிங்டன்:கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் வணிக விண்வெளி விமான நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், மூலம் விண்வெளியில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் சோதனை தோல்வியில் முடிந்தது.
2025ம் ஆண்டில் ஜனவரியில் நடைபெற்ற முந்தைய 7வது ஸ்டார்ஷிப் ஏவுதல் சோதனையும், கடந்த மார்ச் 6 அன்று நடைபெற்ற 8வது சோதனையும் தோல்வியடைந்தன. இந்த இரண்டு தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு, ஸ்பேஸ்எக்ஸ் அதன் ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கெட்டின் 9வது சோதனைப் பயணம் தொடங்கியது.
ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்ட 30 நிமிடங்களுக்கு பிறகு, எரிபொருள் கசிவு காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடலில் வெடித்து சிதறியது. இது ஸ்பேஸ்எக்ஸின் மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக எலான் மஸ்க் கூறியதாவது:
பணியின் முன்னேற்றம் மற்றும் தோல்விக்கு வழிவகுத்த தொழில்நுட்ப சிக்கல்கள் இரண்டையும் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இந்த சோதனை ஒரு 'பெரிய முன்னேற்றம் என்றும் மதிப்பாய்வு செய்ய நிறைய நல்ல தரவுகளை வழங்கியுள்ளது.
இவ்வாறு எலான் மஸ்க் கூறினார்.