அணுமின் நிலையங்கள் அமைக்க ரஷ்யா - ஈரான் இடையே ஒப்பந்தம்
அணுமின் நிலையங்கள் அமைக்க ரஷ்யா - ஈரான் இடையே ஒப்பந்தம்
ADDED : செப் 26, 2025 11:09 PM

மாஸ்கோ:ஈரானில் நான்கு புதிய அணுமின் உற்பத்தி நிலையங்களை அமைக்க, 2.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அணுசக்தி ஒப்பந்தம் ரஷ்யா - ஈரான் இடையே கையெழுத்தானது.
மேற்காசிய நாடான ஈரான், அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் செய்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இதை புதுப்பிப்பது தொடர்பாக தற்போது பேச்சு நடக்கிறது.
ஈரானில், அணுசக்திக்கு தேவையான யுரேனியம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஈரானின் புஷேரில் ஒரே ஒரு அணுமின் நிலையம் மட்டுமே உள்ளது. இது ரஷ்யாவால் கட்டமைக்கப்பட்டது. அணுசக்தி தொடர்பாக சர்ச்சை உள்ள நிலையில், ஈரானில் 2.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 4 சிறிய அணுமின் உற்பத்தி நிலையங்களை அமைக்க, ரஷ்யா நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஆலைகள் வாயிலாக 5,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.