/

செய்திகள்

/

உலகம்

/

ஜி7 மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

ADDED : ஜூன் 17, 2025 07:54 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 07:54 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக, மேற்காசிய நாடான சைப்ரசுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான, 'கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் 3' விருதை, அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார். தற்போது சைப்ரஸ் நாட்டின் பயணத்தை முடித்து கொண்டு கனடா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.

அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், கனடாவில் நடந்து வரும் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். ஜி7 உச்சி மாநாட்டிற்கு இடையே பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். பிரதமர் மோடி பங்கேற்கும் 6வது ஜி7 உச்சி மாநாடு இதுவாகும்.