பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைப்பதில் குளறுபடி; ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல்
பிணைக்கைதிகளின் உடலை ஒப்படைப்பதில் குளறுபடி; ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல்
ADDED : அக் 15, 2025 04:31 PM

ஜெருசலேம்: தங்கள் நாட்டைச் சேர்ந்த பிணைக்கைதியின் உடலுக்கு பதிலாக, வேறு நபரின் உடல் அனுப்பப்பட்டுள்ளதாக ஹமாஸூக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன.
பிணைக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர். மேலும், 4 பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்தது. மொத்தம் 28 பிணைக்கைதிகளின் உடல்களில் 4 பேரின் சடலங்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
உடல்களை பெற்ற இஸ்ரேல், சடலங்களை தடயவியல் சோதனை செய்தது. இதில், ஒரு உடல் தங்கள் நாட்டைச் சேர்ந்தவரின் உடல் அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தங்கள் நாட்டைச் சேர்ந்த பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.