/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் துறைமுகத்தில் வெடித்த மர்ம பொருள்: 4 பேர் பலி; 516 பேர் காயம்

/

ஈரான் துறைமுகத்தில் வெடித்த மர்ம பொருள்: 4 பேர் பலி; 516 பேர் காயம்

ஈரான் துறைமுகத்தில் வெடித்த மர்ம பொருள்: 4 பேர் பலி; 516 பேர் காயம்

ஈரான் துறைமுகத்தில் வெடித்த மர்ம பொருள்: 4 பேர் பலி; 516 பேர் காயம்


UPDATED : ஏப் 26, 2025 07:06 PM

ADDED : ஏப் 26, 2025 05:01 PM

Google News

UPDATED : ஏப் 26, 2025 07:06 PM ADDED : ஏப் 26, 2025 05:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரான் துறைமுகத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் 516க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் நான்கு பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகத்தில் இருந்த கன்டெய்னர் இருந்த பொருள் வெடித்தது. இதனால், அங்கிருந்த கட்டடம் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இந்த விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் 516க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், வெடிப்புக்கான காரணம், எந்தப் பொருள் வெடித்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இச்சம்வத்தில் உயிரிழப்பு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஈரான் அமெரிக்கா இடையே அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.