டில்லியில் கூடியது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
டில்லியில் கூடியது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
UPDATED : செப் 03, 2025 04:29 PM
ADDED : செப் 03, 2025 11:47 AM

புதுடில்லி: டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அதன்படி ஜிஎஸ்டியில் சீர்திருத்தம் செய்வதற்கான பணிகள் நடந்தது. இந்த சூழலில் டில்லியில் இன்றும், நாளையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று (செப் 03) காலை 11 மணிக்கு டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. தீபாவளிக்குள் ஜிஎஸ்டி வரி கணிசமாக குறையும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளதால், டில்லியில் நடக்கும் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.