sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஐ.நா.,வில் பாக்.,கின் புகாருக்கு நம் துாதர்... நெத்தியடி!: சொந்த நாட்டிலேயே குண்டு வீசுவதாக போட்டுடைப்பு

/

ஐ.நா.,வில் பாக்.,கின் புகாருக்கு நம் துாதர்... நெத்தியடி!: சொந்த நாட்டிலேயே குண்டு வீசுவதாக போட்டுடைப்பு

ஐ.நா.,வில் பாக்.,கின் புகாருக்கு நம் துாதர்... நெத்தியடி!: சொந்த நாட்டிலேயே குண்டு வீசுவதாக போட்டுடைப்பு

ஐ.நா.,வில் பாக்.,கின் புகாருக்கு நம் துாதர்... நெத்தியடி!: சொந்த நாட்டிலேயே குண்டு வீசுவதாக போட்டுடைப்பு


UPDATED : செப் 25, 2025 01:48 AM

ADDED : செப் 25, 2025 12:55 AM

Google News

UPDATED : செப் 25, 2025 01:48 AM ADDED : செப் 25, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெனீவா: ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், நம் நாடு காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் சார்பில் புகார் கூறப்பட்டது. இதற்கு 'சொந்த மக்கள் மீதே குண்டு வீசி தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு மற்றொரு நாட்டை பற்றி குறை சொல்ல என்ன தகுதி உள்ளது' என்று இந்தியா நெத்தியடி பதில் கொடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது அமர்வு செப்டம்பர் 8ல் துவங்கியது. பல்வேறு கூட்டங்களுடன் ஒரு மாதம் நடைபெறும் இந்த அமர்வு அக்டோபர் 8 அன்று நிறைவடைகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம், சர்வதேச மனித உரிமைகள் பிரச்னைகளை விவாதிக்கும் கூட்டம் நடந்தது.

இதில், பாகிஸ்தான் சார்பில் பேசிய துாதர்கள் 'இந்தியாவின் காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன' என குற்றம்சாட்டினர்.

விளாசல்

அப்போது அமர்வில் பங்கேற்ற ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் கிஷீஜித் தியாகி, பதில் வழங்கும் உரிமையை பயன் படுத்தி பாகிஸ்தானை விளாசினார்.

அவர் பேசியதாவது:

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் இந்த அமர்வு, மனித உரிமைகளைப் பாதுகாப்பது பற்றிய நல்ல விவாதங்களுக்கானது.

ஆனால், பாகிஸ்தான் இந்த மேடையை தவறாகப் பயன்படுத்தி, இந்தியா மீது அடிப்படையற்ற, துாண்டும் வகையிலான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

பாகிஸ்தான் இந்தியாவின் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளை குறிவைப்பதை விடுத்து, தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய நிலங்களை விடுவிக்க வேண்டும். தங்கள் நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க கவனம் செலுத்த வேண்டும்.

உங்களின் பொருளாதாரம் உயிர்ப்புடன் இருக்க சிகிச்சை தேவைப் படுகிறது. உங்கள் நாட்டின் அரசியலோ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மனித உரிமைகள் காலில் போட்டு நசுக்கப்படுகின்றன.

ஐ.நா.,வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது. மறுபுறம் தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது குண்டுவீசி கொல்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

30 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் திரா வேலி பகுதியில் தெஹ்ரீக் - இ - தலிபான் - பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு கிடங்குகள் இருப்பதாக சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உளவுத் தகவல் கிடைத்தது.

இந்தப் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லையுடன் இணைந்த மலைகள் சூழ்ந்த இடம். இந்த பயங்கரவாத அமைப்பினர் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்திவிட்டு இங்கு பதுங்கி கொள்கின்றனர்.

இந்நிலையில், கடந்த, 22ம் தேதி அதிகாலையில், திரா வேலி பகுதியில் பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் பொது மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து வீடுகள் தரைமட்டமாகின.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டே, மனித உரிமைகள் விஷயத்தில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் நடத்த தேவையில்லை என கிஷீஜித் தியாகி ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பேசினார்.






      Dinamalar
      Follow us