தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ எதிரிகளை தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும்: சொல்கிறது ஈரான்

எதிரிகளை தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும்: சொல்கிறது ஈரான்

எதிரிகளை தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும்: சொல்கிறது ஈரான்


ADDED : பிப் 28, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 05:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெஹ்ரான்: எதிரிகளை முழுமையாக தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை அழிப்பதே நோக்கம் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தாக்குதலை தீவிரப்படுத்தும்படி தன் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில் ஈரானின் புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. எதிரிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை இந்தத் தாக்குதல் தொடரும்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு தலைமையகம், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் தாக்கப்பட்டன.

இவ்வாறு ஈரான் காவல் படை தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us