சார்லி கிர்க் கொலை குற்றவாளி போட்டோ வெளியீடு; சன்மானம் அறிவித்தது எப்பிஐ
சார்லி கிர்க் கொலை குற்றவாளி போட்டோ வெளியீடு; சன்மானம் அறிவித்தது எப்பிஐ
ADDED : செப் 12, 2025 11:25 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் கொலையில் தொடர்புடைய குற்றவாளியின் போட்டோவை எப்பிஐ வெளியிட்டுள்ளது. மேலும், கொலையாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.88 லட்சம் சன்மானத்தை எப்பிஐ அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர், பழமை வாத கொள்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்து பிரபலமானவர் சார்லி கிர்க். அமெரிக்காவின் உடா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியின் போது, மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக எப்பிஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும், சார்லி கிர்க் கொலை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், சார்லி கிர்க் கொலையில் ஈடுபட்ட குற்றவாளி, சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடும் வீடியோவை உடா மாநிலத்தின் ஆணையர் பியூ மசன் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த நபரின் போட்டோவை வெளியிட்ட எப்பிஐ, குற்றவாளியைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.88 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.