பிரிட்டன் அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
பிரிட்டன் அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
UPDATED : செப் 04, 2025 08:01 PM
ADDED : செப் 04, 2025 07:54 AM

லண்டன்: லண்டனில் பிரிட்டன் அமைச்சர் கேத்தரினை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பொருளாதார உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். தற்போது ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்து சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பிரிட்டன் அமைச்சர் கேத்தரினை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம்- பிரிட்டன் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினேன். கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, கடல் சார் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஐடி உற்பத்தி துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதை அமைச்சரிடம் எடுத்து கூறினேன். பொருளாதார வளர்ச்சியை கட்டமைப்பதில் பிரிட்டன் ஒத்துழைப்பு அளிக்குமாறு அமைச்சர் கேத்தரினுக்கு அழைப்பு விடுத்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.