பள்ளியில் இலவச உணவு சாப்பிட்ட 400 குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு
பள்ளியில் இலவச உணவு சாப்பிட்ட 400 குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்பு
ADDED : செப் 02, 2025 10:12 PM
ஜகார்த்தா:இந்தோனேஷியாவில், பள்ளியில் வழங்கப்பட்ட இலவச உணவை சாப்பிட்ட 400 குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பெங்குலு மாகாணத்தில், அரசு திட்டத்தின் கீழ் இலவச உணவு வழங்கப்படுகிறது. நேற்று உணவு சாப்பிட்ட, நான்கு முதல் பன்னிரெண்டு வயதுடைய 400 பள்ளி குழந்தைகள் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டனர்.
இதே போன்றதொரு சம்பவம் கடந்த மாதம் மத்திய ஜாவாவிலும் நிகழ்ந்தது. அங்கு இலவச உணவை சாப்பிட்ட 365 பேர் பாதிக்கப்பட்டனர்.
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதே இச்சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்காலிகமாக இலவச உணவு திட்டத்தை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.
உணவு தயாரிப்பு கூடங்களை ஆய்வு செய்யவும், இந்த சம்பவங்களுக்கான காரணங்களை கண்டறியவும் அதிகாரி குழு அமைக்கப்பட்டுள்ளது.