லிபியா அகதிகள் படகு கவிழ்ந்து 11 பேர் பலி, 40 பேர் மாயம்
லிபியா அகதிகள் படகு கவிழ்ந்து 11 பேர் பலி, 40 பேர் மாயம்
ADDED : ஜூன் 20, 2026 11:51 PM
கெய்ரோ: லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில், நீரில் மூழ்கியவர்களில் 11 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர், மாயமான 40 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் வறுமை, உள்நாட்டுப் போர் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள், சிறந்த வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் லிபியா கடற்பகுதி வழியாக ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.
அப்படி, லிபியா கிழக்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கடந்த 12ம் தேதி, 60க்கும் மேற்பட்ட அகதிகள் ஒரு சிறிய ரப்பர் படகில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதுவரை, 11 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 40 பேரை தேடி வருகின்றனர்.
