/

செய்திகள்

/

தமிழகம்

/

காற்றால் வாழைகள் சேதம் இலைகளுக்கு தட்டுப்பாடு

/

காற்றால் வாழைகள் சேதம் இலைகளுக்கு தட்டுப்பாடு

காற்றால் வாழைகள் சேதம் இலைகளுக்கு தட்டுப்பாடு

காற்றால் வாழைகள் சேதம் இலைகளுக்கு தட்டுப்பாடு


ADDED : ஜூன் 02, 2025 03:10 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: காற்றால் வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளதால், முகூர்த்த நாட்களில் வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவள்ளூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், துாத்துக்குடி உட்பட பல மாவட்டங்களில் வாழை சாகுபடி நடந்து வருகிறது.

இங்கிருந்து, வாழை இலைகள் கட்டுக்கட்டாக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மே மாதம் பல மாவட்டங்களில் வீசிய சூறைக்காற்று காரணமாக, வாழைகள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. இதனால், தலைவாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

துண்டு இலைகளை கட்டுகளாக கட்டி, விற்பனைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் இறங்கி உள்ளனர். தற்போது சில்லரை விற்பனை கடைகளில், ஒரு இலை 10 முதல் 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முன்னர் ஒரு இலை 5 ரூபாய்க்கு கிடைத்தது. முகூர்த்த நேரத்தில் வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.