பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா: கேட்கிறார் சிதம்பரம்
ADDED : ஏப் 04, 2025 07:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பார்லி நிலைக்குழு அறிவுறுத்தலை கேட்டு நிதியை மத்திய அரசு விடுவிக்குமா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து சிதம்பரம் கூறியிருப்பதாவது:
கேரளம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ 2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று பார்லிமென்ட் கல்வித் துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக் கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த அறிவுரையை ஏற்று நிதியை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

