ADDED : ஜூன் 04, 2026 08:56 AM

அ நிறம் | அளவு
முதல்வருக்கென, தனி பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள், அரசால் வழங்கப்பட்டு உள்ளன. ஆனாலும், முதல்வர் விஜய், தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்; காவல் துறை வழங்கும் பாதுகாப்பு மீது, முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?
அரசு பாதுகாப்பு அமைப்புகளை சாராத ஒருவர், 'பாதுகாவலர்' என்ற பெயரில், முதல்வரின் நிழலாக தொடர்ந்து செயல்படுவது, பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஏற்புடையதா; அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள், தனிப்பட்ட பாதுகாவலர், எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?
- இன்பதுரை
அ.தி.மு.க., - எம்.பி.,
