தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/தேர்தல் கிசு கிசு

தேர்தல் கிசு கிசு

தேர்தல் கிசு கிசு


ADDED : மார் 24, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான் அவனில்லை!



கவுண்டர் கட்சி என்று தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் மத்தியில், அக்கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என இலைக் கட்சி தலைமை யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் பலவற்றில் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தோரை வேட்பாளராக களம் இறக்க முடிவெடுத்துள்ளனர்.

தவிக்கும் மலை!



மா ம்பழத்து ஊரில் உள்ள முன்னாள் அமைச்சரான செம்மையான மனிதருக்கு, கட்சி தலைமையோடு ஏழாம் பொருத்தம். பக்கத்து மாவட்டத்தில் உள்ள தங்கமானவரிடம் இதை சரி செய்ய ஆலோசனை கேட்க, அவரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 'பிரச்னையை சரி செய்ங்கன்னு கேட்டு உங்க கிட்ட வந்தா, நீங்களும் இப்படி சொல்றீங்களே'ன்னு புலம்பியபடியே, அடுத்து என்ன செய்வது என புரியாமல் தவிக்கிறாராம் அந்த மலையானவர்.

தொடரும் பேச்சு!



பு திதாக தமிழகத்தை படைக் கிறோம் என்று சொல்லி புறப்பட்டவர் அந்த சாமியானவர், இரு பிரதான கட்சிகளிடமும் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தினாராம். 2 ரிசர்வ், ஒரு பொது, ஒரு ராஜ்யசபா என டிமாண்ட் வைக்க, இலை கட்சி தயங்கியது. தாமரை நெருக்கடியால் பேச்சு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us