தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பில்லுார் அணையை துார் வாருவது எப்போது?

 பில்லுார் அணையை துார் வாருவது எப்போது?

 பில்லுார் அணையை துார் வாருவது எப்போது?

1


ADDED : ஜூன் 16, 2026 08:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 08:01 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கோவை மாவட்ட வனப்பகுதியில், 1967ல் கட்டப்பட்டது பில்லுார் அணை. இதன் உயரம், 100 அடி; நீளம் 1,172 அடி; அகலம், 21 அடி; 1,191 சதுர கி.மீ., நீர்ப்பிடிப்பு பகுதிகள். மின்னுற்பத்திக்கு, 2 மதகுகள், அணை நிரம்பினால் வெளியேற்ற 4 மதகுகள் உள்ளன.

கோவை, திருப்பூர் மாநகராட்சிகள், காரமடை, மேட்டுப்பாளையம், அன்னுார், அவிநாசி மற்றும் வழியோர கிராமங்களுக்கு என, 18 திட்டங்கள், தனியார் தொழில்நிறுவனங்கள், பள்ளிகளுக்கு ஆறு திட்டங்கள் என, 24 திட்டங்களுக்கு இதில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

மறுசீரமைப்பு அணையில் தேக்கப்படும் நீரின் கொள்ளளவு, 1,568 மில்லியன் கன அடி. இதில், 918 மில்லியன் கன அடிக்கு, அதாவது, 58 சதவீதத்துக்கு வண்டல் மண் படிந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், 2 சதவீதம் கூடுதலாக படிகிறது. இதே நிலை நீடித்தால், 2045ல், அணை முழுதும் வண்டல் மண் படிந்து, தண்ணீர் தேக்க முடியாத சூழல் ஏற்படும். குடிநீர் திட்டங்கள் பாதிக்கும்.

மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமாக அணைகளை, பொதுப்பணித்துறை பராமரிக்கும். இங்கு மின்னுற்பத்தி செய்வதா ல், மின்வாரியம் பராமரிக்கிறது. இதற்கு முன், 1990ல் வண்டல் எடுக்க முடிவானது. குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் என கூறியதால், தள்ளிப்போடப்பட்டது. பருவமழையின் போது, மலையில் இருந்து மண் கலந்து தண்ணீர் வருவதால், அணையில் படிந்து மேடாகி உள்ளது.

மாவட்ட நிர்வாகம், மின்வாரியம், வனத்துறை உட்பட, 12 அரசு துறைகள் அடங்கிய, 'அணை துார்வாரும் கமிட்டி' 2019ல் அமைக்கப்பட்டது. 2024ல் வண்டல் மண் பிரச்னை எழுந்தபோது, உலக வங்கி நிதியுதவியுடன், தமிழக மின் வாரியம் மூலம் அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தில் துார்வார அனுமதி வழங்கப்பட்டது.

பரிந்துரை ' முதற்கட்டமாக, திறந்தவெளியில் இயந்திரங்கள் நிறுத்தி, 10,000 கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, 25,000 கன மீட்டர் எடுத்து ஆழப்படுத்தப்படும். இதனால் ஏற்படும் பயனுக்கேற்ப, உலக வங்கி வல்லு நர்கள் கருத்தை பெற்று, அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்' என, அப்போது மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

'ஜியோ டியூப்' முறையில் வண்டல் மண் எடுத்தது வெற்றி பெற்றதால், அதே நடைமுறையை மீண்டும் பின்பற்ற, மின்வாரியம் பரிந்துரைத்தது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பருவ மழை பெய்தால், சில நாட்களில் அணை நிரம்பி விடுகிறது. பாதுகாப்புக்காக மதகை திறந்து நீரை வெளியேற்ற, அது கடலில் கலக்கிறது.

அணையை துார்வார வேண்டிய அவசியத்தை அரசு உணர்ந்து, அதற்கான நடவடிக்கையை உடனே துவக்க வேண்டும். இதற்கு தீர்வு காண, முதல்வர் விஜய் தலைமையில் உயர்மட்ட அளவில் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us