தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவோம்: பா.ஜ.,

 தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவோம்: பா.ஜ.,

 தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவோம்: பா.ஜ.,


ADDED : ஜன 31, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''மக்களுக்காக மக்களுக்குரிய தேர்தல் அறிக்கையை தயாரித்து, அதை நிறைவேற்றுவது பா.ஜ., மட்டுமே,'' என, மத்திய அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகள் அறிக்கை தயாரிக்க, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக மக்களிடம் கருத்து கேட்க, 'மக்களுக்காக மக்களிடமிருந்து' இயக்கத்தை, சென்னை அமைந்தகரையில் நேற்று, மத்திய அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார்.

இதன் வாயிலாக, கருத்து சேகரிக்கும் பெட்டிகளுடன், 38 வாகனங்கள், எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மத்திய அமைச்சர் முருகன் பேசியதாவது:

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவது, பா.ஜ.,வின் வழக்கம். எந்த ரூபத்திலாவது, தேர்தல் அறிக்கையை கட்டாயம் நிறைவேற்றுவோம்.

மகளிர், இளைஞர் என, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, தேர்தல் அறிக்கை தயாரித்து, அதை பா.ஜ., நிறைவேற்றும். அனைவரும் இணைந்து, ஊழல் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருச்சி இரண்டாவது தலைநகரமாகும்! 'ஆட்சிக்கு வந்து அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நேரடியாக செய்ய முடியாத போது, பா.ஜ., சார்பில் எதற்காக தேர்தல் அறிக்கை?' என, அக்கட்சி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : தமிழகத்தில் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் தரமான கல்வி பெற, நவோதயா பள்ளிகள் வர வேண்டும்; புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது பா.ஜ.,வின் கொள்கை. அந்தக் கொள்கைகளை வலியுறுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். அறிக்கையில் சொல்லப்படும் விஷயங்கள், தே.ஜ., கூட்டணி ஆட்சி, குறைந்தபட்ச செயல் திட்டத்துடன் அமைந்ததும் கட்டாயம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையில், 'தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை கொண்டு வருவோம் என்பதாக, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் வலியுறுத்திச் சொல்லப்படும்' என பா.ஜ., வட்டாரங்கள் கூறின.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us