உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 07, 2026 04:35 AM

அ நிறம் | அளவு
சென்னை: கோடை விடுமுறையொட்டி, வேளாங்கண்ணியில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, வரும் 13, 20, 27ம் தேதிகளில் காலை 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 3:00 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும்
வேளாங்கண்ணியில் இருந்து, வரும் 14, 21, 28ம் தேதிகளில் பகல் 12:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும். இந்த ரயில், நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்குடி, தென்காசி, செங்கோட்டை வழியாக இயக்கப்பட உள்ளது. நாளை காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
