ADDED : செப் 26, 2025 06:23 AM

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கு பதிலடி தரும் வகையில், நான்கு மண்டலங்களில் தி.மு.க., இளைஞரணி மாநாடு நடத்த, துணை முதல்வர் உதயநிதி திட்டமிட்டுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி பெற, தி.மு.க., கூட்டணி இலக்கு நிர்ணயித்துள்ளது. த.வெ.க., தலைவர் விஜய் கட்சியின் வருகையால், அதில் பின்னடைவு ஏற்படாமல் தடுக்க, தி.மு.க., இளைஞரணியினர் களமிறக்கப்பட்டு உள்ளனர். இளைஞர் அணியில், 5 லட்சம் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் திட்டத்தையும் உதயநிதி உருவாக்கியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்படும் தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, நான்கு மண்டல மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக, அக்., 12ல், கோவையில் மாநாடு நடத்தப்படுகிறது.
அதன்பின், சென்னை, திருச்சி, மதுரை என, அடுத்த ஆண்டு பிப்., வரை மண்டல மாநாடுகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.