sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

என்னை பின்தொடர வேண்டாம், மரம் ஏற வேண்டாம்: தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்

/

என்னை பின்தொடர வேண்டாம், மரம் ஏற வேண்டாம்: தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்

என்னை பின்தொடர வேண்டாம், மரம் ஏற வேண்டாம்: தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்

என்னை பின்தொடர வேண்டாம், மரம் ஏற வேண்டாம்: தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் அட்வைஸ்

22


ADDED : செப் 19, 2025 03:48 PM

Google News

22

ADDED : செப் 19, 2025 03:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தவெக தொண்டர்கள் என்னை பின் தொடர வேண்டாம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது மரம் ஏற வேண்டாம் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, தவெக தொண்டர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய 12 வழிகாட்டு நெறிமுறைகளை அவர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை;

1. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், அதை முடித்து விட்டுச் செல்லும் போதும் வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம்.

2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள். சிலைகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது.

3.கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள். முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்து கொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழ வேண்டும்.

4.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

5.காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கட்சியினர் தவிர்க்க வேண்டும்.

6.வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

7.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் அனைவரும் சகோதர, சகோதரிகளே என்பதால் பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

8.நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளவேண்டும். கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

9.உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை/இதர சாலைகளின் இருபுறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ. கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

10.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

11. காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்.

12.மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் நிதானமாகக் கலைந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு நடிகர் விஜய் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us