கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தொழுகை; திருப்பூரில் போதை வாலிபர் அட்டூழியம்
கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தொழுகை; திருப்பூரில் போதை வாலிபர் அட்டூழியம்
ADDED : அக் 27, 2025 01:48 PM

திருப்பூர்: திருப்பூர் அருகே முஸ்லிம் வாலிபர் ஒருவர் போதையில் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தொழுகை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மங்கலம் ரோடு செங்குந்தபுரம் பகுதியில் ராஜகணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே அஜ்மல் கான்,21, என்ற முஸ்லிம் வாலிபர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், அந்த வாலிபர் நிதானம் இழக்கும் அளவுக்கு மது அருந்தி விட்டு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ராஜகணபதி கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்த அஜ்மல் கான், போதையில் கோவிலின் உள்ளே அமர்ந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்ட கோவில் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அஜ்மல் கானை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதனை கேட்க மறுத்து, அங்கிருந்தவர்களை மிரட்டியதுடன், தொடர்ந்து தொழுகை நடத்தினார். அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

