/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சிக்கு எதிராக திருப்பூர் விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
/
மாநகராட்சிக்கு எதிராக திருப்பூர் விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
மாநகராட்சிக்கு எதிராக திருப்பூர் விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
மாநகராட்சிக்கு எதிராக திருப்பூர் விவசாயிகள் விடிய விடிய போராட்டம்
ADDED : செப் 18, 2025 06:36 AM

திருப்பூர்: திருப்பூர் முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பைக்கழிவு கொட்டப்பட்டுவதை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை, தினசரி சேகரமாகும், 700 முதல் 800 டன் குப்பையை கொட்டுவதற்கு, காலவாதியான, கைவிடப்பட்ட பாறைக்குழிகளை தான், மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது.இருப்பினும், இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதில் தொடர் தொய்வு ஏற்படுகிறது.
'பாறைக்குழிகளில் குப்பைக் கொட்டப்படுவதால், சுகாதாரகேடு ஏற்படுகிறது' என பொதுமக்களும், தன்னார்வ அமைப்பினரும் கூறி வந்தனர். 'அறிவியல் ரீதியாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் தான், பாறைக்குழிகளில் குப்பைக் கொட்டப்படுகிறது' என மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் முதலிபாளையம் பாறைக்குழியில் கடந்த பல ஆண்டுகளாக குப்பைக்கழிவு கொட்டப்பட்டுள்ள நிலையில், பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் வேலுசாமி, தனியார் ஆய்வகத்தின் உதவியுடன் முதலிபாளையம் பாறைக்குழி பகுதியில் நீரின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்தார்.
ஆய்வறிக்கைப்படி அங்குள்ள நீரில் , டிடிஎஸ் அளவு லிட்டருக்கு 13200 மில்லி கிராம் என்று அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. டிடிஎஸ் அளவு 2000 என்று அளவில் இருப்பதே மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற நிலையில், முதலிபாளையம் பகுதியில் நீர், நிலம், காற்று என்பது மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தச் சென்ற விவசாயிகளை, போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் இரவு முழுக்க உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய தர்ணா அமர்ந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.