நாட்டுக்கே வழிகாட்டியது இலவச பஸ் பாஸ் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
நாட்டுக்கே வழிகாட்டியது இலவச பஸ் பாஸ் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : செப் 12, 2025 01:44 PM

சென்னை: மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர் மட்டும் சிறப்பு பஸ் திட்டத்தின் வெற்றி குறித்து வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சட்டசபை உறுப்பினராக, 1989ல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான்.
அதனை ஏற்றுக்கொண்டு, கருணாநிதி செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர் மட்டும் சிறப்புப் பஸ்களை நமது திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம்.
அமைச்சர் சிவசங்கரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.