ADDED : செப் 04, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதில், 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பது மட்டுமின்றி, சொல்லப்படாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். முதல்வர் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, அதை பெருமிதம் என நினைத்துக் கொள்கிறார்.
தி.மு.க., அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால், அது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடாமல், அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்?
முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது அரசில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை. ஆனால், தமிழக மக்கள் அறிவாளிகள்; ஸ்டாலின் சொல்லும் பொய்களை நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.