கல்வியில் எழுச்சி பெற்ற தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
கல்வியில் எழுச்சி பெற்ற தமிழகம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : செப் 25, 2025 09:40 PM

சென்னை: '' கல்வியில் தமிழகம் பெற்ற எழுச்சியை பிற மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன. அங்கு செயல்படுத்த ஆய்வு செய்கின்றன,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடந்தது. இதில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முக்கிய காரணம் எங்களை பாராட்டிக் கொள்வதற்கு அல்ல. இன்று உங்களை கொண்டாடுவதை பார்த்து, அடுத்த பேட்ஜ் மாணவர்களுக்கு படிப்பு மீது ஆர்வம் ஏற்பட வேண்டும். அது தான் முக்கியம். தெலுங்கானாவில் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இது தான் ஆரோக்கியமான வளர்ச்சி அரசியல்.
மாணவர்கள் நீங்கள் படித்து முன்னேறுவதால், நீங்கள் மட்டுமல்லாமல் உங்கள் குடும்பம் முன்னேறும். அடுத்த தலைமுறையும் முன்னேறும். குடும்பம் முன்னேறினால் மாநிலம் முன்னேறும். மாநிலம் முன்னேறினால் நாடு முன்னேறும். அதனால் தான் தொடர்ந்து கல்வி முக்கியத்துவத்தை எடுத்து சொல்கிறோம். சென்னை மாகாணத்தில் மதிய உணவு திட்டத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தியது. பிறகு காமராஜர், மதிய உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார். மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க உதவியது. அது படிப்படியாக இன்று காலை உணவு திட்டம் உருவாகியது.
காலை உணவு திட்டம் அறிமுகமானது முதல் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்ப்புதல்வன் புதுமைப்பெண் திட்டம் அறிமுகமானதில் இருந்து பிளஸ்2 முடித்த மாணவர்களில் 75 சதவீதம் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
பெண்கள் உயர்கல்வியில் சேர்வது அதிகரித்துள்ளது. கல்வியில் தமிழகம் பெற்றுள்ள எழுச்சியை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் திரும்பி பார்க்கிறது. நமது திட்டங்களில் அவர்கள் மாநிலத்தில் செயல்படுத்த ஆய்வு செய்கின்றனர். இந்த எழுச்சியை பொறுக்க முடியாமல் தான் கல்விக்கு தடை ஏற்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. நமது வளர்ச்சியை பார்த்து ஒதுக்க முடியாமல், தடை ஏற்படுத்துபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும். நம்முடைய திட்டங்களினாலும். உங்களுடைய சாதனைகளாலும் நடக்கும்
எனது இலக்கு அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் உயர்தர கல்வி. கல்வி நிறுவனங்களுக்குள் எவரும் வராமல் இருக்கக்கூடாது. தடுக்கப்படக்கூடாது. மாணவர்கள், அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி உயர பறக்க வேண்டும். அதை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். நீங்கள் உயர்கல்வி முடித்து விட்டு உயர்பதவிக்கு போனாலும் ஆராய்ச்சி படிப்புக்கு செல்ல வேண்டும். உங்கள் வெற்றி அனைத்து திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு உருவாக்க ஸ்டாலின் இருக்கிறேன்கல்வியில் சிறந்த தமிழகம், கல்வியில் உயர்ந்த தமிழகமாக மாற வேண்டும். மாறும். நிச்சயமாக மாற்றுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: மாணவர்களுக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்விக்கு மட்டும் அல்லாமல் உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கணிதம் அறிவியல் ஆசிரியர்கள், விளையாட்டு பாடப்பிரிவை கடன் வாங்கி பாடம் நடத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் விளையாட்டு அமைச்சராக வீரர்கள் சார்பாக மாணவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன். காலை உணவு திட்டம் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவற்றை திமுக அரசு வழங்கி உள்ளது. இதனை ஓ ரு நாள் யாராவது மாற்றி விடலாம் எனறு யாராவது நினைத்தால் அவர்கள் மனதில் பயம் வரும்.அந்த பயம் இருக்கும் வரை தமிழகத்தை ஆட்சி செய்பவர் ஸ்டாலின் தான் என்று பொருள். இவ்வாறு அவர் பேசினார்.