தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/ 200 கி.மீ., வேக ரயில்கள் ஐ.சி.எப்., ஆலைக்கு 'ஆர்டர்'

 200 கி.மீ., வேக ரயில்கள் ஐ.சி.எப்., ஆலைக்கு 'ஆர்டர்'

 200 கி.மீ., வேக ரயில்கள் ஐ.சி.எப்., ஆலைக்கு 'ஆர்டர்'


ADDED : ஏப் 11, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை; நாட்டிலேயே முதல் முறையாக, மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும், இரண்டு புதிய விரைவு ரயில்களை தயாரிக்க, ஐ.சி.எப்., ஆலைக்கு, ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான, ரயில் இன்ஜின், பெட்டி வடிவமைப்பு ஆகியவை, சமீபத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளன.

உத்தரவு இதையடுத்து, இந்த நிதி ஆண்டில், 16 பெட்டிகளைக் கொண்ட, தலா இரண்டு விரைவு ரயில்களை தயாரிக்க, ரயில்வே வாரியம், சென்னையில் உள்ள ஐ.சி.எப்., ஆலைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

முக்கிய நகரங்களை இணைக்கும் வழித் தடங்களில், அதிவிரைவு ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான, கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை -- குஜராத்தின் ஆமதாபாத் இடையே, நாட்டின் முதலாவது புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த தடத்தில் மணிக்கு, 280 கி.மீ., வேகத்தில், ரயில் இயக்கப்பட உள்ளது.

திட்டம் மற்றொரு புதிய திட்டமாக, தற்போதுள்ள வழித்தடங்களில், தேர்வு செய்யும் பாதைகளை மேம்படுத்தி, மணிக்கு 200 கி.மீ., வேகத்தில், அதிவேக ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மணிக்கு 220 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்ட, இரண்டு ரயில்களை தயாரிக்க, ஐ.சி.எப்., ஆலைக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us