உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 04, 2026 03:36 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வந்த சந்தீப்ராய் ரத்தோட், சிறைத்துறை டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை, சென்னை எழும்பூரில் உள்ள, சிறைத்துறை இயக்குநர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
சிறைத்துறை இயக்குநராக பணிபுரிந்த, கூடுதல் டி.ஜி.பி., சங்கர், போதைப் பொருள் நுண்ணறிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
