ADDED : ஜூன் 16, 2026 06:47 AM

சென்னை: 'தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் ஒன்பது மாவட்டங்களில், இன்று சூறாவளி காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் கொத்தவாச்சேரியில், 7 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
இதற்கு அடுத்த படியாக, கடலுார் மாவட்டம் வேப்பூர், சேத்தியாத்தோப்பு மற்றும் குறிஞ்சிப்பாடியில் தலா, 6; கடலுார் மாவட்டம் காட்டுமயிலுார், குப்பநத்தம், கள்ளக் குறிச்சி மாவட்டம் கீழ்படி ஆகிய இடங்களில், தலா, 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், இன்று இடி, மின்னல் மற்றும், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தேனி மாவட் டத் தில் சில இடங் களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில், இன்று அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 40 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
