ADDED : ஜூன் 10, 2026 04:54 AM

சென்னை: 'தமிழகத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னக்கல்லார் பகுதியில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் மீது, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில், இன்று, இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 39 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவா க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
