sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: சி.பி.எஸ்.இ., விளக்கம்

 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: சி.பி.எஸ்.இ., விளக்கம்

 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்: சி.பி.எஸ்.இ., விளக்கம்


ADDED : மே 20, 2026 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 12:53 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட, ஓ.எஸ்.எம்., எனும் கணினி திரைவழி மதிப்பீட்டு திட்டம் வெளிப்படையானது' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள், இந்த ஆண்டு கணினி திரைகளின் வழியே, ஓ.எஸ்.எம்., என்ற முறையில் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இதனால், மாணவர்களின் மதிப்பெண் வெகுவாக குறைந்து விட்டது. இதனால், மருத்துவம், பொறியியல் படிக்க திட்டமிட்டிருந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என, பெற்றோர் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ., அளித்துள்ள விளக்கம்:

மாணவர்களின் அசல் விடைத்தாள்கள், சிறப்பு 'ஸ்கேனர்கள்' வாயிலாக, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, மூன்று கட்ட தர சோதனைகளுக்கு பின், ஆசிரியர்களின் கணினி திரைகளுக்கு அனுப்பப்படும். அதை படிக்கும் ஆசிரியர்கள், 'மவுஸ்' உதவியுடன் மதிப்பெண் வழங்குவர். அவற்றை கணினி பதிவு செய்து, மதிப்பெண்களை கூட்டிக்கொள்ளும்.

இதனால், மதிப்பெண் பதிவு, மொத்த கூட்டல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் மனிதத்தவறுகள், இதில் ஏற்படாது. திருத்தப்பட்ட விடைத்தாளை, மற்ற ஆசிரியர்களும் சரி பார்க்கலாம் என்பதால், வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு அதிகம். கேள்விகள் விடுபடுவதும் தவிர்க்கப்படும்.

இந்த முறையை தொடங்குவதற்கு முன், கேந்திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாதிரி பயிற்சிகள் நடத்தப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிளஸ் 2 விடைத்தாளில் மறு மதிப்பீடு, மதிப்பெண் நகல் கோருவோருக்கு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us