ADDED : செப் 26, 2025 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் நடந்த திருமண விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உடன் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து பேசினர்.
லோக்சபா தேர்தலில் பாஜ கூட்டணியில் ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். சட்டசபை தேர்தலுக்காக அதிமுக உடன் பாஜ கூட்டணி அமைத்துள்ளது. இதில் இபிஎஸ் ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனக்கூறி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அதேபோல் ஓபிஎஸ்சும் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.அவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜ நிர்வாகிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் நடந்த திருமண விழாவில் ஓபிஎஸ் தினகரன் இருவரும் 10 நிமிடம் சந்தித்து பேசினர். இரு வரும் கைகுலுக்கி கொண்டனர்.