sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : மே 25, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2026 01:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 25, 1925

திருச்சி மாவட்டம், பொய்யாமணி கிராமத்தில், நமசிவாயம் - மாரியம்மாள் தம்பதியின் மகனாக, 1925ல் இதே நாளில் பிறந்தவர் ந.மா.முத்துக்கூத்தன்.

சிறு வயதிலேயே கவிதைகள் இயற்றுவது, நடிப்பதில் ஆர்வமாக இருந்த இவர், கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா, எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர்., நாடக மன்றம் உள்ளிட்டவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

பின், பராசக்தி, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதிய பூமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, அரச கட்டளை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம், பாடல்களை எழுதினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வாயிலாக, தென்மாவட்டங்களில் பிரபலமாக இருந்த வில்லுப்பாட்டு கலையை கற்றார்.

வில்லுப்பாட்டு மூலம், வட மாவட்டங்களில் குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 'பாதை மாறாத பாட்டு பயணம், தமிழிசை பாடல்கள், பகை வென்ற சோழன்' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், தன் 80வது வயதில், 2005, மே 1ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us