உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 27, 2026 07:16 AM

அ நிறம் | அளவு
சென்னை: 'எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் மீது, சபாநாயகர் இவ்வளவு அவசரமாக நட வடிக்கை எடுக்க தேவையில்லை' என, தி.மு.க., முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
அவரது அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலர், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், தங்கள் சின்னத்தில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட மனு நிலுவையில் இருக்கிறது.
அப்படி இருக்கும்போது, மூன்று எம்.எல்.ஏ.,க்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் மீது, சபாநாயகர் இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
