மருத்துவ கல்லுாரிகளுக்கு என்.எம்.சி., எச்சரிக்கை
மருத்துவ கல்லுாரிகளுக்கு என்.எம்.சி., எச்சரிக்கை
ADDED : மே 15, 2026 06:38 AM

சென்னை : 'ஆண்டு உறுதியளிப்பு சான்று சமர்ப்பிக்காத மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படாது' என, தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.
அதன் செயலர், டாக்டர் ராகவ் லங்கர் வெளியிட்ட அறிவிப்பு: நாடு முழுதும் உள்ள அனைத்து வகை மருத்துவ கல்லுாரிகளும், 2026 - 27ம் கல்வியாண்டு எம்.பி.பி.ஸ்., படிப்பை தொடங்குவதற்கு, ஆண்டு உறுதியளிப்பு சான்றை, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல், கல்லுாரிக்கு அங்கீகாரம் புதுப்பிக்கவும், அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவில்லை என்றால், சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்படாது. இந்த சான்றை, தேசிய மருத்துவ ஆணையத்திடம் சமர்ப்பிக்க, வரும் 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
